மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
2301 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
2301 days ago
செஞ்சி:கொங்கரப்பட்டு பொன்னியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்14ம் தேதி நடக்கிறது.செஞ்சி அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தில் உள்ள பாலகணபதி, பாலமுருகன், பொன்னிய ம்மன், மாரியம்மன், கங்கையம்மன், நவகிரகங்கள், சிவதுர்க்கை, முனிஸ்வரன், கால பைரவர் ஆகிய கோயில்களுக்கு திருப்பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேகம் 14ம் தேதி நடக்கிறது.அதனையொட்டி, நேற்று 13ம் தேதி காலை 10:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ் வர பூஜை, யாகசாலை பூஜையுடன் துவங்கியது.இன்று 13ம் தேதி காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 7:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. கும்பாபிஷேக தினமான நாளை 14ம் தேதி காலை 6:00 மணிக்கு கோபூஜையும், நான்காம் கால யாகசாலை பூஜையும், 7:00 மணிக்கு கலச புறப்பாடும், 8:15 மணிக்கு கணபதி, பாலமுருகன், மாரியம்மன், பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகமும், 8:45 மணிக்கு கங்கை அம்மன் ஆலய கும்பாபிஷேக மும், 9:00 மணிக்கு பொன்னிபுரீசுவரர் கும்பாபிஷேகமும், 10:00 மணிக்கு விமானம், பொன்னியம்மன், காலபைரவர், சிவ துர்க்கை மற்றும் பரிவார தேவதை களுக்கும் மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
2301 days ago
2301 days ago