திருவண்ணாமலை 50 அடி உயர காளியம்மன் சிலைக்கு கும்பாபிஷேகம்
ADDED :2416 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில், 50 அடி உயரத்தில் சுடலை காளியம்மன் கோவில் சிலை அமைக்கப்பட்டு, நேற்று (ஜூன்., 14ல்) கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதை முன்னிட்டு, யாக சாலை பூஜை அமைக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை நடந்தது. பின்னர் யாக சாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீர் கொண்டு, 50 அடி உயர காளி அம்மன் சிலைக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.