உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

விருதுநகர் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

விருதுநகர்: விருதுநகர் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விருதுநகர் காந்திபுரம் தெரு காளியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டு  கடந்த 3 நாட்களாக  யாகசாலைகள் நடந்தது. நேற்று  பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைதொடர்ந்து   கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், காளியம்மன், முருகன், வள்ளி, தெய்வானை, விஷ்ணு துர்க்கையம்மன், காலபைரவர், ஆஞ்சநேயர் சன்னதி தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.    பக்தர்கள்  மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பிரதிஷ்டயை தொடர்ந்து விஷசே அலங்கார பூஜைகள் நடந்தன. எம்.எல்.ஏ.,க்கள் சாத்துார் ராமச்சந்திரன், சீனிவாசன், எம்.பி.,மாணிக்கம் தாகூர், வியாபார பிரமுகர்கள், ஊர்மக்கள்  என ஏராளமானோர் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். இதன்பின் விருதுநகர் அக்ரஹார தெருவில் உள்ள ஏ.வி.கே.சி., செட்டியார் திருமண மண்டபத்தில் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை தலைவர் ரவீந்திரன், ஒருங்கிணைப்பாளர் சிவகுருநாதன், டிரஸ்டிகள் பகவத்சிங், கோவிந்தன், கார்த்திகேய சுப்புராமன், தனசேகரபாண்டியன், செல்வேந்திரன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !