உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொண்டிமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மொண்டிமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பேரூர்: ராமநாதபுரம் மொண்டிமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பூலுவப்பட்டி அருகேயுள்ள ராமநாதபுரம், மொண்டிமாரியம்மன் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா, கடந்த, 13ம் தேதி, மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, பிள்ளையார் கோவிலிருந்து கலசம், முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. நேற்று முன்தினம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், முதற்கால யாக வேள்வி நடந்தது. நேற்று காலை, மங்கள இசையுடன், இரண்டாம் கால யாக வேள்வி, மஹா தீபாராதனை நடந்தது. காலை, 6:30 மணிக்கு, மஹா கும்பாபிஷேகம், தச தானம், தச தரிசனம், தீபாராதனை, விநாயகர் வழிபாடு நடந்தது. கிராம மக்கள் திரளானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்; அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !