உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் மலைக் கோவிலில் தவிக்கும் பக்தர்கள்

திருத்தணி முருகன் மலைக் கோவிலில் தவிக்கும் பக்தர்கள்

திருத்தணி: முருகன் மலைக் கோவிலில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பக்தர்கள் குளிப்பதற்கும், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். திருத்தணியில், இரு மாதங்களாக, தண்ணீர்தட் டுப்பாடு உள்ளது. ஒரு வாரமாக, கடும் தட் டுப்பாடு நிலவுவதால், மலைக் கோவிலில் உள்ள இலவச கழிப்பறையில், தண்ணீர் இல்லை. இதனால், மொட்டை அடிக்கும் பக்தர்கள் குளிப்பதற்கும், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமலும், கடும் சிரமப்படுகின்றனர். குளிப்பதற்கும், இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும், பக்தர்கள், தனியார் அறைகள், விடுதிகளில், பணம் கொடுத்து, பயன்படுத்துகின்றனர்.

இது குறித்து, திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மழை இல்லாததால் ஆழ்துளை கிணறுகள், தண்ணீரின்றி வறண்டுவிட்டன. இதனால், ஒரு நாளைக்கு, இரண்டு லாரிகளில் தண்ணீர் எடுத்து வந்து, இலவச கழிப்பறையில் ஊற்றுகிறோம். பக்தர்கள் வருகை அதிகரிப்பதால், உடனுக்குடன் தண்ணீர் தீர்ந்துவிடுகிறது. கூடுதல் லாரிகள் மூலம், தண்ணீர் எடுத்து, பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !