உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெத்தனாட்சி பெரியாண்டவர் கோயிலில் கும்பாபிஷேகம்

பெத்தனாட்சி பெரியாண்டவர் கோயிலில் கும்பாபிஷேகம்

ராஜபாளையம்: ராஜபாளையம் அடுத்த செட்டியார்பட்டி கொம்மந்தாபுரம் ஸ்ரீ பெத்தனாட்சி பெரியாண்டவர் கோயிலில்   மஹா கும்பாபிஷேகம்   நடந்தது. இதை முன்னிட்டு 12 ம் தேதி முதல் நவக்கிரஹ ஹோமம், முதல் கால யாக பூஜை. அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றன. நேற்று காலை மங்கள இசை, அனுக்ஞை நான்காம் கால யாக பூஜையுடன்   காலை 9:15 மணிக்கு  விமானம்  , ஸ்ரீ விநாயகர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.  ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன், ஸ்ரீ பெரியாண்டவர் வி சஷே அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் செல்லத்துரை, உப தலைவர் திலகமணி, செயலாளர் சந்திர சேகரன், பொருளாளர் வேலாயுதம் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !