உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

ஆதி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

சூலுார்: சின்ன மோப்பிரிபாளையம் ஆதி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சூலுாரை அடுத்த சின்னமோப்பிரிபாளையம் கிராமத்தில் உள்ள ஆதி விநாயகர் கோவில் பழமையானது.  இங்கு, கோபுரம், மண்டபம் புனரமைத்தல், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன.

கடந்த, 12ம் தேதி அதிகாலை விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை, இரண்டாம் கால ஹோமமும், 64 விநாயகர் மூலமந்திர ஹோமம், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.  தொடந்து, விமான கலச பிரதிஷ்டை, யந்திர ஸ்தாபனம் நடந்தது. மாலை, மூன்றாம் கால ஹோமம் நடந்தது. நேற்று காலை, நான்காம் கால ஹோமம் முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. காலை, 7:00 மணிக்கு, ஆதி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீ ஹரி பஜனை குழுவினரின் கோபியர்களின் கோலாட்டம், சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்டம், கிராமிய தெம்மாங்கு இசை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !