உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சு. பில்ராம்பட்டு அம்மன் கோவிலில் தீமிதி விழா

சு. பில்ராம்பட்டு அம்மன் கோவிலில் தீமிதி விழா

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த சு.பில்ராம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர் அடுத்த சு.பில்ராம்பட்டு அப்பனந்தல் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 15ம் தேதி மாலை குளத்தில் கரகம் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடந்தது. மறுநாள் மாலை திரவுபதியம்மன் சமேத அர்ச்சுணன் முன்பாக தீமிதி விழா நடந்தது.முதலில் கரகம் தீயில் இறங்கியதும், அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு தர்மராஜா பட்டாபிஷேகமும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !