உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயல்குடி அருகே வில்வநாதர் கோயிலில் ராஜகோபுர நிலைக்கால் விழா

சாயல்குடி அருகே வில்வநாதர் கோயிலில் ராஜகோபுர நிலைக்கால் விழா

சாயல்குடி: சாயல்குடி அருகே எம். கரிசல்குளம் கிராமத்தில் பழமையும், புரதான சிறப்பும் பெற்ற வில்வநாதர் கோயில் உள்ளது. கோயிலின் கருவறை, முன் மண்டபம், உள்ளிட்டவைகள் முழுவதும் கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிப்பிரகார அர்த்த மண்டபத்தின் நிலைக்கால் வைக்கும் சிறப்பு பூஜை நேற்று (ஜூன்., 14ல்) காலை 11:00 மணிக்கு நடந்தது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

பெண்கள் குலவை ஒலி எழுப்பிய வண்ணம் இருந்தனர். ராஜகோபுரத்திற்கான சிறப் வேலைப்
பாடுகளுடன்கூடிய பெரிய அளவிலான கருங்கற்கள் வைக்கும் பணி மும்முரமாக நடந்தது. பகலில் அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், எம். கரிசல்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !