உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
உடுமலை:உடுமலை, வாளவாடி மாரியம்மன் கோவிலில் நடந்த, கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.உடுமலை, அருகே, வாளவாடியில், மாரியம்மன், ஊர் சக்தி விநாயகர், பால விநாயகர், பாலமுருகன் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று
(ஜூன்., 14ல்)நடந்தது. நேற்றுமுன்தினம் (ஜூன்., 13ல்), காலையில், கணபதி ஹோமம், மாலையில் கும்ப அலங்காரமும் நடந்தது.
நேற்று (ஜூன்., 14ல்), அதிகாலையில், இரண்டாம் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து, தீபாராதனை கடங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 6:00 மணிக்கு, ஊர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும், தொடர்ந்து, மாரியம்மன், விநாயகர், பாலமுருகன் கோவில் கும்பாபி ஷேகமும், 7:30 மணிக்கு நடந்தது. கும்பாபிஷேகத்தையடுத்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.
வாளவாடி சுற்றுப்பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.