தர்மபுரி அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED :2343 days ago
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, வெங்கட்டம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று (ஜூன்., 14ல்) நடந்தது. கடந்த, 12ல் விநாயகர் ஊர்வலம் மற்றும் புண்ணிய கலச தீர்த்த குடங்களுடன் ஊர்வலம் சென்று அங்காளம்மன் கோவிலுக்கு வந்தது. அன்று மாலை புண்யாக வாசனம், கணபதி பூஜை, முதல்கால யாகசாலை ஜபம் மற்றும் பல்வேறு வகையான ஹோமங்கள் நடந்தன. நேற்று முன்தினம் (ஜூன்., 13ல்) காலை இரண்டாம்கால கணபதி பூஜை, யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று (ஜூன்., 14ல்) காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, மண்டல பூஜை, யாக பூஜை, வேதபாராயணம் நடந்தது. 8:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்துக்கு, புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, திருக்கல்யாணம் நடந்தது.