உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம்: பூலக்காடு கணபதி நகரில் சக்தி கணபதி, சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபி ஷேக விழா நடந்தது. குமாரபாளையம் அருகே, பூலக்காடு கணபதி நகரில் சக்தி கணபதி, சக்தி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா, கடந்த, 14ல் துவங்கியது. நேற்று (ஜூன்., 14ல்), காலை, 7:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்ட போது, ஓம் சக்தி, ஓம் சக்தி என, பக்தர்கள் கோஷம் எழுப்பினர்.

சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடந்தது. குமாரபாளையம், எம்.ஜி.ஆர்., நகர், தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம், வட்டமலை, சத்யா நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !