உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லசமுத்திரம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு கோலாகலம்

மல்லசமுத்திரம் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு கோலாகலம்

மல்லசமுத்திரம்: காளிப்பட்டி, மஹா சக்தி மாரியம்மன், கணபதி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில் புதிதாக கட்டபட்டுள்ள மஹா கணபதி, மஹா சக்தி மாரியம்மன் கோவில்களில், கும்பாபிஷேகம் நடத்த கோவில்
நிர்வாகிகள் மற்றும் பெரியோர்களால் தீர்மானிக்கப்பட்டது.

கடந்த, 12 அதிகாலை விழா தொடங்கியது. நேற்று (ஜூன்., 14ல்) அதிகாலை, 4:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 6:30 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிததீர்த்தம் ஊற்றி, கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !