உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் பிரம்மோற்சவ விழா

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில் பிரம்மோற்சவ விழா

மதுராந்தகம் : ஏரிகாத்த ராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா, நேற்று(ஜூன்., 16ல்), கோலா கலமாக துவங்கியது.மதுராந்தகத்தில், ஏரிகாத்த ராமர் என, அழைக்கப்படும் கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும், பிரம்மோற்சவம் மற்றும் திருத்தேர் பவனி விழாக்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பிரம்மோற்சவம், 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நாச்சியார் திருக்கோலம், யாழி வாகன ஊர்வலம் நேற்று (ஜூன்., 16ல்) நடைபெற்றது.

இன்று (ஜூன்., 17ல்) வேணுகோபாலன் திருக்கோலம், யானை வாகனம் ஆகியவை நடைபெறு கின்றன. நாளை (ஜூன்., 18ல்), பெரிய பெருமாள் திருமஞ்சனம், பெரிய பெருமாள் புஷ்பக வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான, திருத்தேர் உற்சவம், 19ம் தேதி காலை நடைபெறவுள்ளது. நான்கு மாட வீதிகள் வழியாக, ராமபிரான், ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !