காஞ்சிபுரம் சுரகேஸ்வரர் கோவில் ஆகஸ்டில் கும்பாபிஷேகம்
ADDED :2385 days ago
காஞ்சிபுரம் : தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள, பழமையான சுரகேஸ்வரர் கோவி லில், 15 லட்சம் ரூபாய் செலவில், திருப்பணி நடந்து வருகிறது. வரும் ஆக., கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் பழமையான சுரகேஸ்வரர் கோவில் உள்ளது.இந்த கோவில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலில், மூலவர் விமானம் மற்றும் மண்டபம் ஏற்கனவே திருப்பணி முடிந்துவிட்டது.
தற்போது, ராஜகோபுரம் சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. மேலும், கோவில் சுற்றுச்சுவர் பணியும் நடந்து வருகிறது.இதற்காக. 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு முன், இந்த கோவில் கும்பாபிஷேகம், 1976ல் நடந்ததாக கூறப்படுகிறது.
பணிகள் முடிந்து, ஆக., மாதம், கும்பாபிஷேகம் நடந்த திட்டமிடப்பட்டுள்ளதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.