உளுந்துார்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
ADDED :2320 days ago
உளுந்துார்பேட்டை: திருப்பெயர் தக்கா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது.
திருவிழா கடந்த 6ம் தேதி இரவு அம்மனுக்கு காப்பு அணிவித்து விழா துவங்கியது. தினமும், சிறப்பு ஆராதனை மற்றும் வீதியுலா நடந்தது. 14ம் தேதி காலை 5:00 மணியளவில் காத்தவராயன் கழுமரம் ஏறுதல், 7:00 மணியளவில் செடல், அலகு குத்துதலும் பகல் 12:00 மணியளவில் காளி கோட்டை இடுதல், மாலை 4:00 மணியளவில் தீமிதி திருவிழா நடந்தது.இதில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 15ம் தேதி 3:00 மணியளவில் சின்னான் சாமி மோடி எடுத்தலும், 16ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது.