பிரசாதம் இது பிரமாதம்
ADDED :2341 days ago
மிளகு வடை
தேவையானவை:
உளுந்து – 2 கப்
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – அரை லிட்டர்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை: உளுந்தை 20 நிமிடம் ஊற விடவும். பிறகு வடிகட்டி கிரைண்டரில், சிறிதளவு தண்ணீர் தெளித்து மாவை கெட்டியாக அரைத்து எடுக்கவும். இதனுடன் உப்பு, பொடித்த மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். கெட்டியான வடை மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து, ஈரத்துணியில் மெல்லிய வடைகளாகத் தட்டி நடுவில் ஓட்டை போடவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, வடைகளை பொரித்து எடுக்கவும். இது பல நாட்கள் வரை கெடாமல் சுவையுடன் இருக்கும்.