உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாப்பாரப்பட்டி அருகே 12 கிராமத்தினர் ஒன்றிணைந்து நடத்திய தேர்த்திருவிழா

பாப்பாரப்பட்டி அருகே 12 கிராமத்தினர் ஒன்றிணைந்து நடத்திய தேர்த்திருவிழா

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அடுத்த மாதே அள்ளியில் உள்ள காளியம்மன் கோவில் தேர்த் திருவிழா, நேற்று (ஜூன்., 17ல்) நடந்தது. இதில், 12க்கும் மேற்பட்ட கிராமத்தினர் ஒன்றிணைந்து தேர் வடம் பிடித்து இழுத்தனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த மாதேமங்கலத்தில், காளியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், கடந்த, 14ல் தேர்த்திருவிழா துவங்கியது.

இதில், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் திருக்கல்யாணம், உள்ளிட்ட நிகழ்ச்சி கள் நடந்தன. தொடர்ந்து நேற்று (ஜூன்., 17ல்), மலர்களால் அலங்கரித்த தேரை, மாதேமங்கலம், சக்கிலிப்பட்டி, பாப்பாரப்பட்டி, ஏ.பாப்பாரப்பட்டி, பணைகுளம், தட்டாப்பட்டி உள்ளிட்ட, 12க்கும் மேற்பட்ட கிராமத்தினர் ஒன்றிணைந்து தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இதில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !