உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னாபிஷேகம்

பழநி: உலகநலன் வேண்டி, பழநி பெரியநாயகியம்மன் கோயில் அன்னாபிஷேகம் நடந்தது.பழநி மலைக்கோயிலில் ஜூன் 16ல் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு யாக பூஜைகள் நடந்தது.

உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு சங்காபிஷேகம், அன்னத்தில் கிரீடம் சூட்டி பூஜை நடந்தது. நேற்றுமுன்தினம் திருஆவினன்குடியில் குழந்தை வேலாயுத சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது.நேற்று பெரியநாயகியம்மன் கோயிலில் சாயராட்சை பூஜையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அன்னாபிஷேகம் நடந்தது. பழநி கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன் உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர். நிறைவாக இன்று (ஜூன் 19ல்) கோதைமங்கலம் சண்முகநதிக்கரையில் உள்ள பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !