வனதோப்பு உற்சவத்தில் பாடலீஸ்வரர் வீதிஉலா
ADDED :2328 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் நடந்த வனதோப்பு உற்சவத்தில் பாடலீஸ்வரர் அருள்பாலித்தார்.
கடலூர் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரர் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு உற்சவத்தில் அருள்பாலித்து வருகிறார். ஆனி மாதத்தில் வனதோப்பு எனப்படும் வனஉற்சவத்தில் அருள் பாலிக்கிறார். நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் நேற்று முன்தினம் நடந்த வனஉற்சவத்தில் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரர் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை ருத்ரமூர்த்தி,பிரபாகரன் செய்திருந்தனர்.