திருப்பூரில் ஹஜ் பயணம் செல்வோருக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்
ADDED :2336 days ago
திருப்பூர்:ஹஜ் பயணம் செல்வோருக்கு, தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது.திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 109 பேர், ஹஜ் பயணம் செல்கின்றனர். இதனால், அனைவருக்கும், பங்களா ஸ்டாப் நகர்பபுற ஆரம்பசுகாதார நிலையத்தில், மூளைக்காய்ச்சல் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஜெயந்தி, மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வைரஸ் தாக்குதல் பற்றியும், அதற்கான தடுப்பு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக, நைஜீரியா, கென்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் நெருங்கிப் பழக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.