வீரட்டானேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண ஜபம்
ADDED :2386 days ago
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், மலட்டாறு நிலத்தடி நீர்மேம்பாட்டு சங்கம் சார்பில், மழை வரம் வேண்டி மகா வருண சிறப்பு யாகம் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு கணபதி பூஜையுடன் ேஹாமம் துவங்கியது. 8:30 மணிக்கு சிவாச்சாரியார்கள் குளத்தில் இறங்கி மழை வேண்டி வருண ஜபம் செய்தனர்.பின் 16 கால் மண்டபத்தில் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, 108 மூலிகைகளால் சிறப்பு யாகம் நடந்தது. விழாவில் மலட்டாறு ஜீவநதி சங்க தலைவர் சேமங்கலம் தட்சணாமூர்த்தி, பூங்குணம் ராமலிங்கம், புதுப்பேட்டைமணிவண்ணன், சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.