உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

அன்னுார்: கரி­யாம்­பா­ளை­யத்­தில், நுாற்றாண்டு பழ­மை­யான விநா­ய­கர் கோவில் கும்­பா­பி­ஷே­கம் நடந்­தது. கரி­யாம்­பா­ளை­யத்­தில், நுாற்றாண்டு பழ­மை­யான செல்வ விநா­ய­கர் கோவில் உள்­ளது. இக்­கோ­வி­லில் புதி­தாக இரு­நிலை கோபு­ர­மும், முன் மண்­ட­ப­மும் கட்­டப்­பட்டு திருப்­பணி செய்­யப்­பட்­டது. இதை­ய­டுத்து, கும்பாபி­ஷேக விழா, 18ம் தேதி காலை­யில் கண­பதி ஹோமத்­து­டன் துவங்­கி­யது. இரவு விநா­ய­கர் வழி­பாடு, முதற்­கால யாக பூஜை நடந்­தது. 19ம் தேதி காலை­யில் இரண்­டாம் கால பூஜை­யும், மதி­யம் கோபுர கல­சம் வைத்­த­லும், மாலை­யில் மூன்­றாம் கால பூஜை­யும் நடந்­தது. நேற்று காலை 10:15 மணிக்கு, கோபு­ரத்­துக்­கும், பின்­னர் செல்வ விநா­ய­க­ருக்­கும், கும்­பா­பி­ஷே­கம் நடந்­தது. தொடர்ந்து மகா அபி­ஷே­கம், தீபா­ரா­தனை நடந்­தது. 2,000க்கும் மேற்­பட்ட பக்­தர்­க­ளுக்கு அன்­ன­தா­னம் வழங்­கப்­பட்­டது. மூன்று நாட்­களும் திரு­முறை பாடப்­பட்­டது. நாதஸ்­வர கச்­சேரி நடந்­தது. சுற்­று­வட்­டா­ரத்தை சேர்ந்த திர­ளான பக்­தர்­கள் பங்­கேற்­ற­னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !