உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூங்கில்துறைப்பட்டு அருகே மழைவேண்டி சிறப்பு தொழுகை

மூங்கில்துறைப்பட்டு அருகே மழைவேண்டி சிறப்பு தொழுகை

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடகீரனூரில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடகீரனூர் பகுதியில் கடுமையான வெயில் தாக்கத்தால் குடிநீர் இன்றி அவதியடைந்து வருகின்றனர். மழையின்றி கரும்பு, நெல் போன்ற பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.இதனால், மழை வேண்டி, வடகீரனூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் நேற்று (ஜூன்., 21ல்) மதியம் சிறப்பு தொழுகை நடந்தது. சிறப்பு அழைப்பாள ராக முஸ்தாபா பங்கேற்று சிறப்பு பிராத்தனை செய்தார்.தொடர்ந்து இன்றும் (ஜூன்., 22ல்) காலை 8:00 மணிக்கு சிறப்பு தொழுகையும், பிராத்தனையும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !