மடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
ADDED :2411 days ago
திருப்புவனம் : மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இங்கு 40 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல் எண்ணும் பணி நடைபெறும். நேற்று காலை இருக்கன்குடி மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் கங்காதரன் தலைமையில் மடப்புரம் கோயில் செயல் அலுவலர் செல்வி, கோயில் ஊழியர்கள், ஐயப்பசேவா சங்கத்தினர் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.ஒன்பது உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் 25 லட்சத்து 22 ஆயிரத்து 69 ரூபாய் ரொக்கமும், 300 கிராம் தங்கமும், 257 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.