சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேரோட்டம்
ADDED :2475 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் ராஜா, எஸ்.ஐ.,க்கள் பாண்டி,ரவி, கோயில் நிர்வாக அலுவலர் சுசிலாராணி வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கினர். எம்.எல்.ஏ., மாணிக்கம் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நான்கு ரத வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் தேரை இழுத்து செல்ல சிரமப்பட்டனர். மேலத்தெருவில் மின்கம்பத்தில் சிக்கி தேரின் அலங்கார துணி கிழிந்தது. ரத வீதிகளில் மின் கம்பங்களை அகற்றி மின் ஒயர்களை தரையில் பதிக்கும் திட்டம் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதனால் ஆண்டுதோறும் தேரோட்டத்தின் போது தேர் சேதமடைவது தொடர்கிறது.