2 லட்சம் பேர் ஹஜ் பயணம்
ADDED :2376 days ago
புதுடில்லி: இதுவரை இல்லாத சாதனையாக இந்த ஆண்டு இரண்டு லட்சம் இந்தியர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். இதில் 48 சதவீதம் பெண்கள். இதில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் மெஹ்ரம் எனப்படும் ஆண் துணை இல்லாமல் தனித்து செல்கின்றனர் என சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் லோக்சபாவில் தெரிவித்தார்.