உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

நெல்லிக்குப்பம் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

நெல்லிக்குப்பம்:திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.

நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வணங்கினால் கஷ்டங்கள் தீரும் என்பது நம்பிக்கை.தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகம், காலபைரவருக்கு 108 சங்காபிஷேகம், பால், தயிர் உட்பட 18 பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் வீதிஉலா வந்தார்.பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார். கைலாசநாதர் கோவிலிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !