உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலைவாசல் மாரியம்மன் கோவிலில் பால்குடம், பொங்கல் வழிபாடு

தலைவாசல் மாரியம்மன் கோவிலில் பால்குடம், பொங்கல் வழிபாடு

தலைவாசல்: தலைவாசல் அருகே, மாரியம்மன் கோவில் விழாவில், பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தலைவாசல், தேவியாக்குறிச்சி கிராமத்தில், ஸ்ரீ தேவி மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 21ல், காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன், திருவிழா தொடங் கியது.

மூப்பனார், கருப்பனார் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று (ஜூன்., 25ல்) காலை, பால்குடம் ஊர்வலம் தொடங்கி, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது. பக்தர்கள் எடுத்து வந்த பாலால், அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !