உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் ராகவேந்திரர் கோவிலில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் ராகவேந்திரர் கோவிலில் கும்பாபிஷேகம்

விழுப்புரம்: விழுப்புரம் வண்டிமேடு ராகவேந்திரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

விழுப்புரம் வண்டிமேடு கே.வி.ஆர். நகரில் உள்ள, அபிநவ மந்த்ராலய ராகவேந்திரர் சுவாமி கோவிலில், சிலாரூப ராகவேந்திரர் சுவாமி, வலம்புரி விநாயகர், மகா விஷ்ணு, தட்சணாமூர்த்தி, நீலகண்ட விநாயகர், நவக்கிரஹங்கள், நாஹர் மாஞ்சாலம்மன், வித்யா சரஸ்வதி, சீதாராம லோக ஷேம வீரஆஞ்சநேயர், ஆவுடையார் லிங்கம் ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவையொட்டி, நேற்று காலை புண்யாவாசனம், ரித்விக்வர்ணம், கலச ஸ்தாபனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு வேத பாராயணம், தொடர்ந்து ஸ்வஸ்தி வாசனம், மகா மங்களாரத்தி நடந்தது.இன்று காலை 7:00 மணிக்கு கணபதி ேஹாமம் ஸம்ப்ரோக்ஷண ேஹாமங்கள், பலி, பூர்ணாஹூதி நடைபெற்றது. 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் மந்திராலயா பீடாதிபதி ஸ்ரீ சுமந்திர தீர்த்தர் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவர் குருஜி ராகவேந்திராச்சார், கவுரவ தலைவர் அனந்தராமன், செயலர் ரமஷே், பொருளாளர் வாசுதேவன், அறக்கட்டளை உறுப்பினர்கள் நாராயணசாமி, பாண்டுரங்கன், டாக்டர் சந்திரசேகரன், ராகவேந்திரன், நீலாஸ் சுவாமிநாதன், பாலாஜி, பழனிவேல், வழக்கறிஞர், ரங்கராஜ், மாணிக்கம், அன்பழகன், செந்தில்குமரன் ஆகியோர் செய்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !