உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் தெப்பக்குளம் சீரமைப்பு

திருக்கோவிலூர் தெப்பக்குளம் சீரமைப்பு

திருக்கோயிலுார்: தினமலர் செய்தி எதிரொலியால் திருக்கோவிலுார் தெப்பக்குளம் முட்செடிகள் அகற்றப்பட்டு சீரமைப்பு பணி நடைபெறுகிறது.திருக்கோவிலுார் தெப்பக்குளம் பல நுாறு ஆண்டுகள் பழமையானது.

ஏரியிலிருந்து பாதாள கால்வாய் மூலம் குளத்திற்கு தண்ணீர் வந்து, எப்போதும் குளம் நிர் நிறைந்து காணப்படும்.சிறப்பு வாய்ந்த இக்குளத்தை புராதன நகர மேம்பாட்டு திட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சீரமைத்து செம்மைப்படுத்த நிதி ஒதுக்கி இருந்தார். ஒப்பந்ததாரர்கள் குளத்தில் இருந்த மண்ணை எடுத்து விற்று விட்டு, பெயரளவுக்கு சீரமைப்பு பணியை செய்தனர்.பணியில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பான புகார் காரணமாக பணிகள் பாதியிலேயே நின்றது. இதன் காரணமாக குளத்தில் முட்புதர்கள் மண்டி, ஏரியிலிருந்து வரும் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு குளம் பாழானது.இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் சமீபத்தில் படத்துடன் வெளியானது. அதனைத் தொடர்ந்து, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராமன் மேற்பார்வையில், நேற்று சீரமைப்பு பணி துவங்கியது. தற்காலிகமாக குளத்தில் உள்ள முட்புதர்களை அகற்றி படிகளில் உள்ள மண் அள்ளும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இரண்டு ஜே.சி.பி., மூலம் குளத்தில் இருந்த மண் சமன் செய்யும் பணி நடந்தது.தொடர்ந்து ஏரியிலிருந்து குளத்திற்கு வரும் பாதாள கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக செயல் அலுவலர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !