வடலூரில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2309 days ago
வடலூர்: வடலூரில் சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. வடலூரில் எஸ்.ஐ.எல்., சித்தி விநாயகர் கோவிலில் உள்ள அஸ்வத்த விநாயகர், ஐயப்பன், நவக்கிரஹங் கள், பாலசுப்பரமணிய சுவாமி, குபேர ஆஞ்சநேயர் ஆகிய கோவில்கள் திருப்பணி செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.விழா முன்னிட்டு, கடந்த 26ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹாகணபதி ஹோமம், வாஸ்து சாந்தி நடைபெற்றது. மாலை யாக சாலை பிரவேசம், முதல்கால யாகபூஜைகள் நடைபெற்றது. 27ம் தேதி காலை 2வது கால யாக பூஜைகள், மாலை 3வது கால யாகபூஜை, நடைபெற்றது. நேற்று (ஜூன்., 28ல்) காலை நான்காவது கால யாகபூஜை முடிந்து, கடங்கள் புறப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை விழாகுழுவினர், பொது மக்கள் செய்தனர்.