உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் துவக்கம்

கிருஷ்ணராயபுரம் பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் துவக்கம்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதியில், புதிதாக கட்டப்பட்டுள்ள பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கம்பத்திற்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கிருஷ்ணராயபுரம், கிழக்கு காலனியில் புதிதாக விநாயகர், முருகன்சன்னதியுடன், பகவதியம்மன், கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் விழா வரும் ஜூலை, 8ல் நடக்கிறது. இதற்காக, கம்பத்திற்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நேற்று (ஜூன்., 28ல்) காலை, கோவில் வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ் தலைமை வகித்தார். இதில், கணபதி பூஜை, விளக்கு பூஜை, விஷ்ணு பூஜை செய்யப்பட்டது. பின்னர் கம்பத்திற்கு காப்பு கட்டப்பட்டது. இதில், கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !