திருமலை பிரம்மோற்சவம்: டிக்கெட் பெற அழைப்பு
ADDED :2373 days ago
ஈரோடு: திருமலை பிரம்மோற்சவம் மற்றும் தீபாவளி சேவா டிக்கெட் பெற, ஈரோடு ஸ்ரீவாரி டிரஸ்ட், பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
திருமலையில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா, நடப்பாண்டு செப்.,30 முதல் அக்.,8 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்வான கருட சேவை அக்.,4ல் நடக்கிறது. பிரம்மோற்சவம், தீபாவளி சேவா டிக்கெட், வரும், 5ல் வழங்கப்படும். ரூ.300 தரிசன டிக்கெட், தங்கும் வசதிக்கான டிக்கெட், 9ல் வழங்கப்படும். டிக்கெட் வழங்குவது தேவஸ்தானத்தின் முடிவே இறுதியானது. டிக்கெட் பெற ஆதார் கார்டுடன், நேரில் வர, ஸ்ரீவாரி டிரஸ்ட் பொறுப்பாளர் உமாபதி அழைப்பு விடுத்துள்ளார்.