பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2439 days ago
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், கார்த்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, திருத்தேரில் கோவில் வலம் நடந்தது. பின்னர் இரவு 10.00 மணிக்கு பாலமுருகன், விநாயகர், அம்மன் சுவாமிகள் ஊஞ்சலில் வைத்து, தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர், அன்னதானம் வழங்கப்பட்டது.