உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையம் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

குமாரபாளையம் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், சிவன் கோவில்களில் பிரதோஷத்தை யொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. ஆனி மாத பிரதோஷ நாளையொட்டி, குமாரபாளையம் அக்ரஹாரம் காசிவிஸ்வேஸ்வரர் கோவிலில் சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமிகளை, பக்தர்கள் பல்லக்கில் சுமந்தவாறு கோவிலை வலம் வந்தனர். இதேபோல் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், கோட்டைமேடு சிவபெருமான் கோவில், சவுண்டம்மன் கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு
வழிபாடுகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !