பெரியகோவிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா
ADDED :2311 days ago
தஞ்சாவூர் : தஞ்சை பெரியகோவிலில், வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்தரி விழா தொடங்கியது.
தஞ்சாவூர் பெரியகோவிலில், பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வாராஹி அம்மன், முருகன், விநாயகர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளன. ஆண்டு தோறும், வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு, ஆஷாட நவராத்திரி விழா நேற்று தொடங்கிது. இதையொட்டி, காலையில் கணபதி ஹோமமும், சிறப்பு யாகமும் நடைபெற்றது. தொடர்ந்து வாராஹி அம்மனுக்கு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில், வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதில், ஏராளாமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா நாள்களில், வாராஹி அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் நடைபெறும்.