கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவிலில் அன்னகூடை உற்சவம்
ADDED :2373 days ago
திருப்போரூர்: கொளத்துார், கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவிலில், அன்னகூடை உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. திருப்போரூர் அடுத்த, கொளத்துாரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில், தினசரி, காலை, சிறப்பு பூஜையுடன், சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது.நேற்று, அன்னகூடை உற்சவம் கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி, கல்யாண ரங்கநாதர், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஆகியோருக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது.பின், ரங்கநாதர் முன் தயிர்சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம், இனிப்புகள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு மலர் அர்ச்சனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் பெருமாளை வழிபட்டனர்.