உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி 11 குதிரைகளை வைத்து அஸ்வமேத யாகம்

மழை வேண்டி 11 குதிரைகளை வைத்து அஸ்வமேத யாகம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே, 11 குதிரைகளை வைத்து மழை வேண்டி, அஸ்வமேத யாகம் செய்தனர். மேட்டுப்பாளையம் பெள்ளாதியை அடுத்த, சின்னத்தொட்டிபாளையத்தில் அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது.

இங்கு நான்காவது ஆண்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது. கடந்த மாதம், 28 அன்று விநாயகர் வழிபாடுடன் நிகழ்ச்சி துவங்கியது. முதல்நாள் காயத்ரி மந்திரம், மகாலட்சுமி ஹோமம், நவகிரஹம், 108 மூலிகை ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டாம் நாள் அமிர்தவர்ஷினி, காமாட்சி அம்மனுக்கு அலங்கார பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்னைக்கு, 1,008 குங்கும அர்ச்சனை நடந்தது.மாலையில் சிறுமுகை ஆலாங்கொம்பு பத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள், பசுமாடு, குதிரைகள் ஆகியவற்றை சகல வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. நேற்று காலையிலிருந்து மதியம் வரை, மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், 11 குதிரைகளை வைத்து அஸ்வமேத யாக பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை சேரன்நகர் சித்தி விநாயகர் கோவிலிருந்து, ஊர்பொது மக்கள் சார்பாக கோவிலுக்கு, சீர்வரிசை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதைத் தொடர்ந்து, 10:45 லிருந்து, 11:45 மணி வரை, நஞ்சுண்டேஸ்வரருக்கும், அமிர்தவர்ஷினி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !