அத்தி வரதர் வைபவம்: ரூ.50 கட்டணம் ரத்து
ADDED :2305 days ago
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம் நேற்று துவங்கியது. இலவச தரிசனம், 50 ரூபாய் தரிசனம் என, இரு வழிகளில், பக்தர்கள் நேற்று கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், பொது தரிசனத்தை காட்டிலும், 50 ரூபாய் கட்டண தரிசனத்துக்கு, நேற்று அதிக பக்தர்கள் வந்திருந்தனர்; பக்தர்களை கட்டுப்படுத்த போலீசார் சிரமப்பட்டனர். இதனால், பக்தர்கள் விரைவாக தரிசிக்க, 50 ரூபாய் கட்டண தரிசனத்தை ரத்து செய்து, அறநிலையத்துறை கமிஷனர், பனீந்திரரெட்டி மற்றும் கலெக்டர், பொன்னையா உத்தரவிட்டுள்ளனர்.சகஸ்ர நாமம் அர்ச்சனை டிக்கெட்டுகள், அறநிலையத் துறை, www.hrce.gov.in என்ற இணையதளத்தில், இன்று மதியம், 2:00 மணி முதல் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.