கல் காளை புல் தின்னுமா?
ADDED :2333 days ago
கவுடர்கோன் என்ற வடநாட்டு மன்னன், ஒருமுறை தமிழக சிவத்தலமான திருநெல்வேலி வந்தான். நாத்திகனான அவன், கலையம்சம் மிக்க நெல்லையப்பர் கோயிலுக்குள் நுழைந்தான். நந்தீஸ்வரரைக் கண்டதும், “ஒரு காளை மாடா இந்த சாமிக்கு வாகனம்”என்று கேலி செய்து சிரித்தான். அங்கிருந்த பக்தர்கள், “இவரை கற்சிலை என்று எண்ணாதீர்கள். இவர்தான் சிவகணங்களின் தலைவர்,” என்றனர். “ஓகோ! இந்த மாட்டிற்கு உயிர் இருக்கிறது என்றால் புல்லைத் தின்னுமா?” என்று மீண்டும் பரிகாசித்தான். அந்தக்கணமே ‘மா’ என்று கத்தியபடி, நந்தி காளையாக உயிர் பெற்று எழுந்தது. பக்தர்கள் வழங்கிய புல்கட்டை சாப்பிட்டு விட்டு மீண்டும் கல்லாகி விட்டது. இந்த அதிசயம் கண்ட மன்னன் கவுடர்கோன் சிவபக்தன் ஆனான்.