ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் சுவாதி உற்ஸவம் துவக்கம்
ADDED :2305 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதை முன்னிட்டு காலை 11:10 மணிக்கு பெரியாழ்வார் சன்னதி கொடிமரத்தின் முன் பூஜைகளை செய்த சதீஷ் பட்டர் கொடி ஏற்றினார். செயல் அலுவலர் இளங்கோவன், வேதபிரான் அனந்தராமன், சுதர்சன், மணியம் கோபி, ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமஷே் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் பெரியாழ்வார் தினமும் காலையில் மண்டபம் எழுந்தருளலும், இரவு வீதி உலாவும் நடக்கிறது. ஜூலை 10 அன்று காலை 9:00 மணிக்கு செப்புதேரோட்டம் நடக்கிறது.