உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சானுார் கோயிலில் அங்க பிரதட்சணம் டோக்கன் அதிகரிப்பு

திருச்சானுார் கோயிலில் அங்க பிரதட்சணம் டோக்கன் அதிகரிப்பு

திருப்பதி: திருமலைக் கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள திருப்பதி திருச்சானுார் பத்மாவதி அம்மன் கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு அங்கபிரதட்சணம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் வெள்ளிக்கிழமை மட்டும் அதிகாலை 3:30 மணி்க்கு அனுமதிக்கப்படுவர். அங்கப்பிரதட்சணம் செய்யவிரும்பும் பக்தர்கள் முதல் நாளே தங்களது ஆதார் போன்ற அடையாள அட்டையைக் காட்டி அனுமதி டோக்கன் வாங்கிவைத்துக் கொள்ள வேண்டும். இந்த டோக்கன் இதுநாள் வரை நுாறு பேர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது அதிகப்படியான பக்தர்கள் பலன் பெறும் விதத்தில் இன்று முதல் 150  பேர்களுக்கு வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !