உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதிலமடைந்த ஆயிரம் ஆண்டு கோவில்: புதுப்பிக்க வலியுறுத்தல்

சிதிலமடைந்த ஆயிரம் ஆண்டு கோவில்: புதுப்பிக்க வலியுறுத்தல்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகேயுள்ள கொங்கனேசுவரர் கோவிலை புதுப்பிக்க அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சோழ மன்னர்கள் ஆட்சி எல்லை கொங்கு மண்டலம் வரை பரவியிருந்தது. இந்த கால கட்டத்தில், அமராவதி ஆற்றங்கரையில் பல சைவ, வைணவ கோவில்கள் கட்டப்பட்டு, அதனை சார்ந்து புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டன.

கடத்துார், காரத்தொழுவு, கொமரலிங்கம், கொழுமம் உள்ளிட்ட பல கிராமங்களில் கற்களை மட்டும் பயன்படுத்தி அமைத்த இந்த கோவில்கள் கற்றளிகள் என சிறப்பு பெயரில் அழைக்கப்பட்டன.மடத்துக்குளம் தாலுகா கடத்துார் அமராவதி ஆற்றங்கரையில், இந்த அமைப்பில், கொங்கனேசுவவரர் கோவில் கட்டப்பட்டது. கடந்த நுாற்றாண்டு வரை மிக சிறப்புடன் இருந்தது. பல ஆயிரக்கணக்கான மக்கள் வழிபட்டு வந்தனர்.ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது, போதிய பராமரிப்பு இன்றி, கட்டடம் சேதமடைந்துள்ளது. பக்கவாட்டு சுவர்களில் கற்கள் விழுந்து விட்டன. சுற்றுச்சுவர் இல்லாததால், சிலைகள் திறந்த வெளியில் உள்ளன.கருவறையில் லிங்கம் மட்டும் உள்ளது. சில சிலைகள் உடைந்து காணப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் முன்னோர்களின் அடையாளமாக உள்ள கொங்கனேசுவரர் கோவிலை புதுப்பிக்க வேண்டும்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கோவிலைச்சுற்றி ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். குறுகிய பாதை வழியாக தான் செல்ல முடியும். மன்னர் ஆட்சி முறை, தானங்கள், பூஜைகள் குறித்த கல்வெட்டுக்கள் சிதிலமடைந்துள்ளன. சிறப்பு மிக்க கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை அறநிலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !