மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
2259 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
2259 days ago
வீரபாண்டி: செல்வ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று (ஜூலை 4ல்.,) நடப்பதையொட்டி, நேற்று (ஜூலை 3ல்.,) நடந்த தீர்த்தகுட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.சேலம் அருகே, ஆட்டையாம்பட்டி மணியாரன்காடு செங்குந்தர் சமுதாயத்துக்கு சொந்தமான, செல்வ சித்தி விநாயகர் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. நேற்று (ஜூலை 3ல்.,) காலை, 6:00 மணிக்கு கணபதி யாகத்துடன் விழா துவங்கியது. கல்வடங்கம் காவிரியாற்றில் இருந்து, புனித நீரை பக்தர்கள் குடங்களில் எடுத்து வந்தனர். பின்னர், சின்னமாரியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக சென்றனர். இன்று (ஜூலை 4ல்.,)காலை, 7:00 மணிக்கு யாகசாலை பூஜை பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்து, புனிதநீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் மேள தாளத்துடன் கோவிலை வலம் வந்து, 8:00 மணிக்கு கும்பாபிஷேகத்தை நடத்தி வைப்பர். 9:00 மணிக்கு மூலவர் செல்வ சித்தி விநாயகருக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்படும்.
2259 days ago
2259 days ago