உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திட்டக்குடி மகா மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்

திட்டக்குடி மகா மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்

திட்டக்குடி:திட்டக்குடி மேலவீதியில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் (ஜூலை 2ல்.,) கொடியேற்றத்துடன் துவங்கியது.

திட்டக்குடி மேலவீதியில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி நேற்று முன்தினம் (ஜூலை 2ல்.,) காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 11 மணிக்குகொடியேற்றத் துடன் திருவிழா துவங்கியது.ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். வரும் 10ம் தேதி ஊரணி பொங்கல், 11ம் தேதி தேர்திருவிழா, 12ம் தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !