உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோயிலில் ஆனி விழா துவக்கம்

அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோயிலில் ஆனி விழா துவக்கம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனி பிரமோற்ஸவ விழா நேற்று காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்யப்பட்டு மேள வாத்தியத்துடன் கொடியேற்றம் நடந்தது. தினமும் ஒவ்வொரு மண்டகப்படியாரின் நிகழ்ச்சிகளுடன் பத்தாம் நாள் திருக்கல்யாணம், பதினோறாம் நாள் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மகேந்திர பூபதி , தக்கார் ஆவுடையம்மாள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !