உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன், விநாயகர் கோயிலில் கலசாபிஷேம்

பத்ரகாளியம்மன், விநாயகர் கோயிலில் கலசாபிஷேம்

தேவதானப்பட்டி: வைகை அணை வரதராஜ் நகர், ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலையில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன், விநாயகர் கோயிலில் கலசாபிஷேம் நடந்தது. முதல்நாள் கணபதி ஹோமம், சுஹ்ருத ஹோமம், உஷபூஜை, சுதர்சன பூஜை, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம்,உச்ச பூஜை, தீபாராதனை, பகவதிசேவை, குருதி பூஜை, பிரசாதம் வழங்கல், இரண்டாம் நாள் காலையில் கணபதி ஹோமம்,காயத்ரி ஹோமம், பிரம்ம கலச பூஜை, நவக்ரஹ பூஜை, பால் அபிஷேகம், பிரம்ம கலசாபிஷேகம் நடந்தது. சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் ஆதித்யாபதி, இயக்குனர் வரதராஜன், பள்ளி தாளாளர் சத்திய மூர்த்தி, ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !