உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி செல்வ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

வீரபாண்டி செல்வ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி, செல்வ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆட்டையாம்பட்டி, மணியாரன்காடு செங்குந்தர் சமுதாயத்துக்கு சொந்தமான, செல்வ சித்தி விநாயகர் கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் (ஜூலை 3ல்.,) கணபதி யாகத்துடன் துவங்கியது. கல்வடங்கம் காவிரியாற்றில் இருந்து, புனிதநீரை எடுத்து வந்து, விநாயகருக்கு அபிஷேகம் செய்யப் பட்டது.  நேற்று (ஜூலை 3ல்.,)காலை, 7:00 மணிக்கு யாகசாலை பூஜை பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்து, யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை, சிவாச்சாரியார்கள் மேள தாளத்துடன் கோவிலை வலம் வந்து, விநாயகர் சிலைக்கு தெளித்து கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

நெருக்கமான குடியிருப்புகளுக்கு நடுவே கோவில் உள்ளதால், இதற்கு கோபுரம், கலசங்கள் அமைக்கப்படவில்லை. காலை, 9:00 மணிக்கு மூலவர் செல்வ சித்தி விநாயகருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !