திருச்செங்கோடு உலக சமாதானம், மழை வேண்டி பூஜை
ADDED :2323 days ago
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, கூட்டபள்ளி காலனி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி யில் உள்ள சர்வசக்தி மாரியம்மன் கோவிலில், உலக சமாதானம், மத நல்லிணக்கம், பருவ மழை தவறாமல் பெய்ய வேண்டி கலச வேள்வி பூஜை நடந்தது. மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் சார்பில் நடந்த இந்த வேள்வி பூஜை, சக்தி கொடியேற்றத் துடன் தொடங்கியது. ஒரே பீடத்தில் அமைந்த, ஒன்பது யாக குண்டத்தில் யாகம் நடந்தது. இதே போல், ஒரே பீடத்தில், ஒன்பது கலசங்கள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. செவ்வாடை அணிந்த ஆதிபராசக்தி பக்தைகள் கலந்து கொண்டு போற்றி பாடல்கள் பாடி வழிபட்டனர். நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.